கோத்தா கினபாலு: புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா இன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
65 வயதான சட்டமன்ற உறுப்பினர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வாரிசான் வட்டாரம் தெரிவித்ததாக எப்எம்டி தெரிவித்துள்ளது.
“அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று பிற்பகல் காலமானார்,” என்று அவர் கூறினார்.
கடந்த மாநிலத் தேர்தலில், மானிஸ் 8,557 வாக்குகளைப் பெற்று, 6,005 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார்.