Home One Line P1 சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படலாம்!

சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படலாம்!

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க முடியும் என்று சூசகமாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எந்த மாநிலங்கள் இதில் சம்பந்தப்படும் என்று அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

இந்த மாநிலங்களுக்கான ஆபத்து மதிப்பீடுகளை நடத்த சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“சுகாதார அமைச்சகம் சம்பவங்களின் எண்ணிக்கை, தொற்று வீதம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. எனவே சுகாதார அமைச்சகம் இந்த கண்டுபிடிப்புகளை இந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கும். அந்த மாநிலங்கள் பாதுகாப்பானவை என்றும், அவை பச்சை மண்டலங்களாகக் கருதப்படலாம் என்றும் அவர்கள் உணர்ந்தால், அங்குள்ள கட்டுப்பாடுகள் முடிவடையும்.

“இருப்பினும், இது இன்னும் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டைப் பொறுத்தது. வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில், நான் அதை அறிவிப்பேன், ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.