Home One Line P2 பிக்பாஸ் 4 : ஆரி, ரியோ காப்பாற்றப்பட்டனர்

பிக்பாஸ் 4 : ஆரி, ரியோ காப்பாற்றப்பட்டனர்

1175
0
SHARE
Ad

சென்னை : ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளியேறி வரும்  பிக்பாஸ் (4) தொடரில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) அரங்கேறிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட 7 பேரில் இருவர் காப்பாற்றப்பட்டனர்.

நடிகர் ஆரி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பிரபலம் ரியோ ஆகியோரே அந்த இருவராவர். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் இல்லத்திலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆகக் கடைசியாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். முதலாவதாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் 7 பேர் வெளி வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டனர்.

ஆரி, ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர், அனிதா, சுசித்ரா ஆகியோரே அந்த 7 பேர்களாவர்.

இதில் ஆரி,ரியோ இருவரும் நேற்று காப்பாற்றப்பட்டிருப்பதால் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் எஞ்சிய ஐவரான பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர், அனிதா, சுசித்ரா ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.