Home One Line P2 ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் ஒப்புதல்

ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் ஒப்புதல்

592
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக மீண்டும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3- ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் பல மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு போகப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்து வந்தார். மேலும், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.