Home அரசியல் “சுல்கிப்ளிக்கு தொகுதி: என்னை மட்டும் புறக்கணித்தது ஏன்?” இப்ராகிம் அலி வருத்தம்

“சுல்கிப்ளிக்கு தொகுதி: என்னை மட்டும் புறக்கணித்தது ஏன்?” இப்ராகிம் அலி வருத்தம்

547
0
SHARE
Ad

Ibrahim Aliகோலாலம்பூர்,ஏப்ரல் 16 – தேசிய முன்னணி தன்னை பாசீர்மாஸ் தொகுதி வேட்பாளராக அறிவிக்காதது குறித்து பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

அதோடு பெர்க்காசா துணைத் தலைவரான சுல்கிப்ளிக்கு ஷாஆலம் தொகுதி வழங்கியுள்ள தேசிய முன்னணி, தன்னை புறக்கணித்தது ஏன் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து இப்ராகிம் அலி மேலும் கூறுகையில், “தேசிய முன்னணி எனக்கு வாய்ப்பு தரவில்லை. இருந்தாலும் நான் பாசீர் மாஸ் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவேன்.

#TamilSchoolmychoice

எனது இந்த முடிவு தேசிய முன்னணிக்கு எதிரானது அல்ல, பாசீர் மாஸ் தொகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்குமாறும் தான் கேட்டுக் கொண்டுள்ளதாக இப்ராகிம் அலி தெரிவித்தார்.