Home 13வது பொதுத் தேர்தல் சபா மாநிலத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 32 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்னோ போட்டி

சபா மாநிலத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 32 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்னோ போட்டி

570
0
SHARE
Ad

FW255459_SB03_021012__MUSA_AMAN2_1கோத்தா கினபாலு, ஏப்ரல் 16 – சபா மாநில அம்னோ வேட்பாளர் பட்டியல் இன்று பலத்த ஆரவாரங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கும், கேலிக் கூச்சலுக்கும் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.சபா அம்னோ தலைவரான மூசா அமான் அப்பட்டியலை வெளியிட்டார்.

பொதுத்தேர்தலில், சபா மாநிலத்திலுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் 32 தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளிலும் அம்னோ போட்டியிடுகிறது.

அப்பட்டியலின் படி,  சில தொகுதிகளில் மட்டுமே புதிய வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் அதன் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதன்படி, கோத்தா பெலுட் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் ரஹ்மான் டஹ்லான் மீண்டும் தனது தொகுதியிலும், பெலூரான் தொகுதியில் ரொனால்டு கியாண்டியும்,கினாபாத்தாங்கன் தொகுதியில் பங் மொக்தார் ராடினும்,செம்பூர்ணா தொகுதியில் முகமது ஷாபி  அப்டாலும் தங்கள் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று மூசா அறிவித்தார்.

இது தவிர, கிலியாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸீஸா முகமத் டன் பிபோர்ட் தொகுதிக்கும், லகாட்டத்து சட்டமன்ற உறுப்பினரான டத்தோ நாஸ்ருன் டத்து மன்சூர்,சீலாம் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடம் பெயருகிறார்கள்.

எனவே நாஸ்ரூனுக்குப் பதிலாக லகாட் டத்து சட்டமன்ற தொகுதிக்கு தொழிலதிபரான யூசோப் அப்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் செம்பூர்ணா தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சபா மாநில அம்னோ துணைத் தலைவரான முகமது சபி அப்டாலின் சகோதரர் ஆவார்.

முகமது சபியின் முன்னாள் அரசியல் செயலாளரான டத்தோ ஜாவ்ஜான் சம்புக்கோங் சுலபயான் சட்டமன்ற  தொகுதிக்கும், டத்தோ ஜேம்ஸ் ராடிப் சுகட் சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.