அலோர் ஸ்டார்: ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோயிலை இடிப்பதற்கு எதிரான மஇகா எதிர்ப்பு தெரிவிப்பது, அதன் நலன்களைத் தொடும்போது சட்டம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கட்சி விரும்புவதைப் போல இருப்பதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.
மஇகா தலைவர்கள், மந்திரி பெசாரை திமிர்பிடித்தவர், விவரம் தெரியாதவர் மற்றும் மந்திரி பெசாராக இருக்க தகுதியற்றவர் என்று விமர்சிக்கப்பட்ட பின்னர், சனுசி மஇகா அரசியல் மேடையில் பொருத்தமான பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்று கூறினார்.
“ஊராட்சிமன்றத்திற்கு உட்பட்ட திறந்தவெளிகளிலும் நடைபாதைகளிலும் கட்டப்பட்ட கோயில்களின் பிரச்சனைகளில் ஒரு ஹீரோவாக இருப்பதைத் தவிர, மஇகா அவை தொடர்புடையதாக இருக்க வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்” என்று சனுசி எப்எம்டியிடம் கூறினார்.
கோலா கேடாவின் தாமான் பெர்சாத்துவில் உள்ள ஸ்ரீ ராஜ முனிஸ்வரர் கோயிலை இடிப்பதில் அலோர் ஸ்டார் ஊராட்சி மன்றத்தின் நடவடிக்கையை அவர் ஆதரித்தார். ஏனெனில், இது ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டது மற்றும் கோவில் வழங்கப்பட்ட அறிவிப்பை புறக்கணித்தது என்று அவர் கூறினார்.
“மஇகா தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அதாவது கோயில் 3-4 ஆண்டுகளுக்கு முன்பு காலியாக உள்ள வீட்டுப் பகுதியில் கட்டப்பட்டது. ஒரு கட்டிட அமைப்பு கட்டப்படும்போது, அது சட்டவிரோதமானது மற்றும் ஊராட்சி மன்றத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டதால், அமலாக்க நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது, ” என்று சனுசி கூறினார்.
இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று சனுசி கூறினார்.
“இது ஓர் அரசியல் அல்லது மத பிரச்சனை அல்ல. இது உள்ளூர் அதிகாரத்தின் கீழ் ஒரு உள்ள சட்ட பிரச்சனை. மாநிலம் முழுவதும் ஊராட்சி அதிகாரப் பகுதிகளில், எதிர்கால கட்டமைப்புகள் விருப்பப்படி கட்டப்பட வேண்டும் என்று மஇகா விரும்புகிறதா? எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதி இல்லையா? ” என்று அவர் வினவினார்.
“இது இனவெறி அல்லது மதத்தின் விஷயம் அல்ல. அனைத்து பிரச்சனைகளும் அரசியல் மயமாக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை பிடிவாதமாக அரசியல் மூலதனமாக்கினால் மஇகா அவர்களின் பாரம்பரிய தொகுதிகளையும் இழக்கும் என்று நான் கவலைப்படுகிறேன், ” என்று அவர் கூறினார்.