Home One Line P1 மார்ச் தொடங்கி 7 மாதத்தில் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டனர்

மார்ச் தொடங்கி 7 மாதத்தில் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டனர்

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் மலேசியாவிற்கு வேலை செய்ய வரும் நாடுகளிலிருந்து வந்தவர்களாவர்.

புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப்பிரிவு பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மியான்மர் நாட்டவர்கள் அதிகமாக 14 பேர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தது. அதனை அடுத்து வங்காளதேசம் (9), இந்தோனிசியா (6), இந்தியா (5), பாகிஸ்தான் (2) பேர் மரணம் அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரிட்டன், வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா குடிமக்கள் தலா ஒரு மரணம் பதிவு செய்துள்ளனர். ஒருவரது குடியுரிமை அடையாளம் காண முடியவில்லை.

மரணத்திற்கான கிட்டத்தட்ட அனைத்து காரணங்களும் நிதி மற்றும் குடும்ப பிரச்சனைகள் (48 வழக்குகள்) தொடர்பானவை. ஒரே ஒரு வழக்கு மட்டுமே மனநலப் பிரச்சனையை உள்ளடக்கியது.

தற்கொலை வழக்குகள் பெரும்பாலானவை பகிர்ந்து வாழும் வீடுகளில் நடந்ததாக காவல் துறை வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று காவல் துறை நம்புகின்றனர்.

மார்ச் 18- இல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18 அன்று அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஒரே ஒரு தற்கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.