Home One Line P1 ஹாடி அவாங்கைச் சந்திக்கிறார் பேராக் சுல்தான்

ஹாடி அவாங்கைச் சந்திக்கிறார் பேராக் சுல்தான்

493
0
SHARE
Ad

ஈப்போ : தன்னைச் சந்திக்க, பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் அனுமதி கேட்டதைத் தொடர்ந்து, அவரை நாளை செவ்வாய்க்கிழமை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு ஈப்போவிலுள்ள கிந்தா அரண்மனையில் நாளைக் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என பெர்னாமா செய்திக் குறிப்பு உறுதிப்படுத்தியது.

பேராக் மாநிலத்தில் தற்போது 3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். பாஸ் ஆதரித்த தேசியக் கூட்டணி ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அண்மையில் கவிழ்க்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு பதவியிலிருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பேராக் சுல்தான் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தன்னைச் சந்திக்க அழைத்தும் பாஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்து விட்டனர். பின்னர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் சுல்தானிடம் மன்னிப்பு கோரினர்.

இதற்கிடையில் சந்திக்க அனுமதி வேண்டும் என பேராக் சுல்தானிடம் அனுமதி கேட்டு பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாளை சுல்தானைச் சந்தித்து பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஹாடி அவாங் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக டிசம்பர் 10-ஆம் தேதி பேராக் மந்திரி பெசாராக சரானி முகமட் பதவியேற்றபோது அவருடன் ஐந்து ஆட்சிக் குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர். அவர்களில் நால்வர் அம்னோவினர். ஒருவர் பெர்சாத்துவைச் சேர்ந்தனர்.

தன்னைச் சந்திக்க முன்வராத பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் பேராக் சுல்தான் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கமாட்டார் என ஆரூடங்கள் கூறப்பட்டன.

நாளை ஹாடி அவாங் – பேராக் சுல்தான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து பாஸ் கட்சியின் சார்பிலும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.