Home One Line P1 2 மில்லியன் ஊழல் வழக்கு: தெங்கு அட்னான் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்

2 மில்லியன் ஊழல் வழக்கு: தெங்கு அட்னான் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 மில்லியன் ரிங்கிட் அபராதம் தொடர்பாக முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோர் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்.

தற்காப்பு தரப்பு வழக்கறிஞர் தான் ஹாக் சுவான் நேற்று மேல்முறையீட்டு அறிவிப்பை சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“மேல்முறையீட்டு அறிவிப்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இது இ-பைலிங் (இயங்கலை) மூலம் செய்யப்பட்டது,” என்று வழக்கறிஞர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை, 2 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் தெங்கு அட்னான் குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் தம்மை நிரபராதி என நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நீதிபதி தெரிவித்தார்.

“சந்தேகத்திற்கு இடமில்லாமல் அரசு தரப்பு குற்றத்தை நிரூபித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையில் தன்னை தற்காத்துக் கொள்ள ஆதாரங்களை முன்வைக்கத் தவறிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை நான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறேன்,” என்று சாய்னி தீர்ப்பளித்தார்.

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, தெங்கு அட்னான் சம்பந்தப்பட்ட 1 மில்லியன் ஊழல் வழக்கில் விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசெட் காயாமாஸுக்குச் சொந்தமான ஹாங் லியோங் இஸ்லாமிய வங்கி காசோலை மூலம், அசெட் கயாமாஸ் செண்டெரியான் பெர்ஹாட்டின் இயக்குநராக இருக்கும் சாய் கின் காங்கிடமிருந்து தெங்கு அட்னான் 2 மில்லியனை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றம் 2016-ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று புசாட் பண்டார் டாமான்சாரா சிஐஎம்பி கிளையில் செய்யப்பட்டுள்ளது.