Home One Line P1 பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 புதிய திரிபு குறித்த தகவல்கள் இல்லை!

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 புதிய திரிபு குறித்த தகவல்கள் இல்லை!

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றின் புதிய திரிபு குறித்த எந்த அறிக்கையும் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு மிக வேகமாகப் பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அறிக்கைகள் இருந்தால், புதிய திரிபு குறித்த இருப்பை அடையாளம் காணவும், அது பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் மரபணு வரிசைமுறை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மலேசியா இன்னும் அதன் எல்லைகளை முழுமையாக திறக்கவில்லை, ஏனென்றால் வெளிநாட்டிலிருந்து கொவிட் -19 சம்பவங்கள் இதுபோன்று நடக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இதுவரை, சவுதி அரேபியா, ஜெர்மனி போன்ற சில நாடுகள் தொற்றின் புதிய திரிபு காரணமாக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

“கடந்த காலத்தில், மலேசியா சிவகங்கா தொற்றுக் குழுவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அங்கு டி 614 ஜி பிறழ்வு கொவிட் -19 தொற்றினை மேலும் மோசமாக்கியது. எனவே, இந்த நேரத்தில் தேசிய எல்லைக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.