Home One Line P1 தம்பின் மருத்துவமனையிலிருந்து கொவிட்-19 நோயாளி தப்பி ஓட்டம்

தம்பின் மருத்துவமனையிலிருந்து கொவிட்-19 நோயாளி தப்பி ஓட்டம்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (டிசம்பர் 30) தம்பின் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொவிட் -19 நோயாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

33 வயது இளைஞரான இவர், கடைசியாக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முகவரியைக் கொண்டுள்ளார். ஜெலெபு சிறைச்சாலையில் ம் முன்னாள் கைதியுமான இவர் நேற்று காலை 11.45 மணியளவில் அவரது மருத்துவமனை படுக்கையில் காணாமல் போனதாக தம்பின் மாவட்ட காவல் துறைத் தலைவர் அனுவால் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

“அவர் கடைசியாக நீல நிற ஜீன்ஸ் மற்றும் பச்சை நிற சட்டை அணிந்திருந்தார்,” என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நோயாளி மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களைக் கொண்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது சுகாதார அமைச்சகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அனுவால் கேட்டுக்கொண்டார்.