மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
– கண்ணதாசன்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
புத்தம் புது வருடம் புத்தம் புது விடியல் புத்தம் புது தொடக்கம்
முடிவென்று எதுவும் இல்லை… கொரோனாவைத் தவிர!
ஆக 2021-ஐ உள்ளப்பூர்வமாக வரவேற்று, உணர்வுப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
நேற்று என்பது அனுபவம், நாளை என்பது எதிர்காலம்
இன்றுதான் நிகழ்காலம், நிதர்சனம்.
2020 ஒரு வித்தியாசமான அனுபவம். உலக மக்கள் அனைவரும் இதுவரை கண்டிராத சர்வதேச பரவல், பொருளாதார சிக்கல் இரண்டையும் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய சூழல். ஆனால் ஒருவழியாக அதனை எதிர்கொள்ளும் வழியையும், மனதைரியத்தையும் நாம் அனைவரும் கொண்டுள்ளோம்.
கண்ணதாசன் கூறியது போல,
“நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு”
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
2021 அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தரவல்ல ஆண்டாக அமைய வேண்டும்.
டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனித வள அமைச்சர், மஇகா தேசியத் துணைத் தலைவர்