வாஷிங்டன் : ஜனவரி 20-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லத் தயாராகும் இறுதித் தருணங்களில் கூட சீனாவின் மீதும் அதன் வணிக மையங்கள் மீதும் நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெருக்குதல்களை அதிகரித்து வருகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) மேலும் 8 சீன குறுஞ்செயலிகளைத் தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தடை செய்யப்பட்டிருக்கும் குறுஞ்செயலிகளின் ஆங்கிலப் பெயர்கள் பின்வருமாறு:
- Ant Group’s Alipa
- Tencent’s (TCTZF) QQ Wallet
- WeChat Pay
- CamScanner
- SHAREit,
- VMate
- WPS Office.
“அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடியோ, அல்லது வேறு ஏதாவது வழிகளில் பெற்றோ, அந்த தகவல் திரட்டுகளைக் கொண்டு சீனா தனது பொருளாதார, தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது” என டிரம்ப் கையெழுத்திட்டிருக்கும் உத்தரவு தெரிவிக்கிறது.
அடுத்த 45 நாட்களுக்கு டிரம்பின் இந்த உத்தரவு, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் அமுலில் இருக்கும். டிரம்ப் பதவி விலகிய பின்னரும் இந்த உத்தரவு அமுலில் இருக்கும். எனவே, இந்த உத்தரவின் தாக்கம், எப்படியிருக்கும் என்பதும் அடுத்து பதவி ஏற்கும் ஜோ பைடன் சீன உறவில் மாறுதல்களை அறிவிப்பாரா என்பதும் அனைத்துலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கும் கேள்விகளாகும்.