Home One Line P1 அம்னோ- பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டது என இப்போது சொல்ல முடியாது!

அம்னோ- பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டது என இப்போது சொல்ல முடியாது!

497
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை அம்னோ முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையாது என்று பாஸ் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துளார்.

ஆனால், இந்த உறவு மேலும் பலப்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

10 மாதங்களுக்கு முன்பு பாஸ், தேசிய முன்னணி மற்றும் சரவாக் கட்சி கூட்டணி (ஜிபிஎஸ்) உடன் தேசிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியபெர்சாத்து உடன் அம்னோ தொடர்ந்து ஒத்துழைக்காது எனும் கூற்று இன்னும் நிர்ணயிக்கப்படாதது என்று மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் தேசிய கூட்டணியை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மேலும் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பு குறித்து அம்னோ இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

பெர்சாத்து உடன் ஒத்துழைப்பைத் தொடரலாமா அல்லது நேர்மாறாக இருக்க வேண்டுமா என்று தீர்மானிக்க அம்னோ உச்சமன்ற குழு ஜனவரி 31 அன்று ஒரு பொதுக் கூட்டம் நடத்துகிறது.

மக்களவையில் தேசிய கூட்டணி மிகவும் பலவீனமான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. பெர்சாத்து மற்றும் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ எடுக்கும் எந்தவொரு முடிவும் பொதுத் தேர்தலுக்கான வாய்ப்பைத் தூண்டும்.