Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இல்லை- நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இல்லை- நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

431
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் மோசமடைந்து வருவதால், தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் இன்னும் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு மன்றம் உடனான சிறப்பு அமர்வின் மூலம், தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செய்து மதிப்பீடு செய்து வருகிறது. இது செயல்படுத்தப்பட வேண்டிய கடுமையான நடைமுறைகளைக் கருத்தில் கொள்வதும் உட்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவார்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் சப்ரி யாகோப் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 3,027 சம்பவங்கள் பதிவாகின. இது வரையிலும் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகமானதாகும். மேலும், இதே போக்கு நிலவினால், மே மாதத்தில் 8,000 சம்பவங்கள் வரை பதிவாகலாம் என சுகாதார இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று கூறியிருந்தார்.