“பொதுத் தேர்தலின் அவசியம் ஏனென்றால் பல நாடுகள் இதைச் செய்துள்ளன. அவற்றில் அமெரிக்கா, சிங்கப்பூர் தேர்தல்கள். சினி, சிலிம் மற்றும் சபா மாநிலத் இடைத்தேர்தல்களையும் நடத்தியுள்ளோம்.
“சபாவில் சம்பவங்கள் அதிகமான காரணம் என்னவென்றால், தீவில் உள்ள மக்கள் தங்கள் பரிசோதிக்காமல் உள்ளே நுழைந்தார்கள். இது சுற்றியுள்ள தீவுகளுக்கும் பரவியது. நமக்கு பொதுத் தேர்தல் தேவை, ஏனெனில் இந்த அரசாங்கம் உலகின் மிக குறுகிய பெரும்பான்மை அரசாங்கமாகும். 222 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன. நீங்கள் ஓர் அரசாங்கமாக இருக்க விரும்பினால் 111 பெரும்பான்மை இருக்க வேண்டும். அதையே இப்போது மலேசிய அரசாங்கமும் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 6-ஆம் தேதி, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் கொவிட் -19 தொற்றின் தற்போதைய நிலைமை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் கூறினார். மேலும், இலக்கு வைக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துமாறும் அவர் பரிந்துரைத்தார்.