Home One Line P1 துங்கு ரசாலிக்கு கொவிட்-19 தொற்று

துங்கு ரசாலிக்கு கொவிட்-19 தொற்று

763
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சாவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் எனவும் ஊடகங்கள் தெரிவித்தன.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் கொவிட்-19 தீவிரமாகப் பரவி வரும் நிலையில் துங்கு ரசாலி போன்ற பிரமுகர்களும் இந்தத் தொற்றுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, 4 மத்திய அமைச்சர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.