புத்ரா ஜெயா : கொவிட் தடுப்பூசிகள் பெரும்பான்மையான மலேசியர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதத்தில்தான் கிடைக்கும் என அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார்.
முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“நீங்கள் ஒரு ஆரோக்கியமான நபர், 60 வயதுக்கும் குறைந்தவர், ஒரு முன்களப் பணியாளர் அல்ல, என்ற நிலைமை இருந்தால் உங்களுக்கான சுற்றுப்படி எதிர்வரும் மூன்றாம் காலாண்டில் அதாவது அக்டோபரில் நீங்கள் தடுப்பூசியைப் பெறுவீர்கள்” என கைரி தெரிவித்தார்.
இந்த விவரங்களை தனது வலைத் தளத்தில் பதிவிட்ட கைரி அடுத்த 18 மாதங்களில் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.