Home One Line P2 த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்

803
0
SHARE
Ad

சென்னை : ஜி.கே.வாசன் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்து பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) காலமானார்.

அவருக்கு வயது 71.

கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

மூப்பனாரைத் தலைவராகக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஞானதேசிகன் பின்னர் மூப்பனார் காங்கிரசிலிருந்து விலகியபோதும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சி கண்டபோதும் அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

பின்னர் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் தலைமையை ஏற்ற, ஞானதேசிகன் தொடர்ந்து தமிழ் மாநிலக் காங்கிரசில் செயல்பட்டு வந்தார்.

ஞானதேசிகன், 2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் செயலாற்றினார்.