Home One Line P1 அவசரநிலை பிரகடனத்திற்கு முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர்கள் எதிர்ப்பு

அவசரநிலை பிரகடனத்திற்கு முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர்கள் எதிர்ப்பு

564
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் அவசரகால நிலையை அறிவித்ததை முன்னணி வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர். இந்த அவசரநிலை பிரகடனம் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் முன்னாள் வழங்கறிஞர் மன்றத் தலைவர்களாக இருந்த மொத்தம் 10 வழக்கறிஞர்கள், மத்திய அரசியலமைப்பின் கீழ் அதன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, ​​அவசரகாலத்தைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் ஒரு முன்னுதாரணத்தை அமைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது குறித்தும் அவர்கள் கவலைகளை எழுப்பினர். இருப்பினும் மற்ற நடவடிக்கைகள் கொவிட் -19 தடுப்பு உத்தரவின் கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஸ்டீவன் திரு, கிறிஸ்டோபர் லியோங், ரகுநந்த் கேசவன், அம்பிகா ஸ்ரீநிவாசன், இயோ யாங் போ, குதுபுல் ஜமான் புகாரி, மா வெங் வாய், சைரஸ் வி தாஸ், ஜைனூர் ஜகாரியா மற்றும் பரம் குமாரசாமி ஆகியோர் அந்த பத்து வழக்கறிஞர்கள் ஆவர்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (1) அவசரகால நிலைமை மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே அமல்படுத்த அனுமதிக்கிறது. அதாவது நாட்டில் அமைதி, பொருளாதார வாழ்க்கை அல்லது பொது ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இது நடப்புக்கு வரும்.

“இது இலகுவாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது, ஏனெனில் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது மற்றும் சட்டம் செயல்படுவதை நிறுத்துகிறது. அத்தகைய அறிவிப்பு நாட்டை சட்ட ரீதியாக வீழ்த்தும். எனவே, அவசரநிலையின் பயன்பாடு நமது கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வரையறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளை மிக தீவிரமான சூழ்நிலைகளில் தவிர்த்து வெளியிடாதது அரசாங்கத்தின் தவறு. இந்த நிலைமை இங்கே இருக்கிறதா?,” என்ரு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.