Home One Line P1 தைப்பிங் சிறைச்சாலை, ஊழியர் தங்குமிடத்தில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

தைப்பிங் சிறைச்சாலை, ஊழியர் தங்குமிடத்தில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

429
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தைப்பிங் சிறைச்சாலை மற்றும் அதன் பணியாளர்கள் தங்குமிடம் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ், நாளை முதல் பிப்ரவரி 8 வரை வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

கொவிட் -19 தொற்று சம்பவங்கள் அவ்வட்டாரத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“ஜனவரி 23 வரை, மொத்தம் 43 கொவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40 பேர் கைதிகள் மற்றும் மூன்று சிறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டவை,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.