Home One Line P2 அமெரிக்கா: இராணுவத்தில் திருநங்கைகள் இணைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்கா: இராணுவத்தில் திருநங்கைகள் இணைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

512
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவில் இராணுவத்தில் திருநங்கைகள் இணைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  அத்தடையை நீக்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி திருநங்கைகள் உள்ளிட்ட இதர பாலினத்தவர்களும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் இணையலாம். முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பின் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் திருநங்கைகள் இணைய தடை விதித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆட்சிக்கு வந்தபிறகு திருநங்கைகளுக்கு தடை விதித்த டிரம்பின் உத்தரவை இ ரத்து செய்துள்ளார். 2016- ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் இருந்தபோது, இராணுவத்தில் திருநங்கைகள் இணைந்து சேவை செய்ய அனுமதி அளித்தார். இது வரலாற்று சிறப்புமிக்க உத்தரவாக அமைந்தது.

#TamilSchoolmychoice