Home One Line P1 தைப்பூசத்தை முன்னிட்டு மஇகா துணைத் தலைவர் பத்து மலை வருகை

தைப்பூசத்தை முன்னிட்டு மஇகா துணைத் தலைவர் பத்து மலை வருகை

504
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 28) தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவளத் துறை அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் பத்து மலை திருத்தலத்திற்கு வருகை புரிந்திருந்தார்.

நாட்டில் கொவிட்-19 தொற்று தாக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு தழுவிய அளவில் நடைபெற இருந்த தைப்பூசத் திருவிழா இம்முறை இரத்து செய்யப்பட்டது. மாறாக மக்கள் வீட்டில் இருந்தபடியே முருகக் கடவுளை வணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வருடா வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலைக்கு வருகைப் புரியும் சரவணன், இம்முறையும் ஆலயம் சென்றுள்ளார். அவரை ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மாலை அணிவித்து வரவேற்றார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பல முறை முறையீட்டு பத்து மலை இரத ஊர்வலம் கடந்த ஜனவரி 27 அன்று நடைபெற்றது. இது போல பினாங்கிலும் இரத ஊர்வலம் நடத்தப்பட்டது.