Home One Line P1 பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்

பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அமானா கட்சி சின்னத்தின் கீழ், டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் போட்டியிட அனுமதித்தால், நம்பிக்கை கூட்டணி அமனாவுடன் உறவுகளைத் துண்டிக்கக்கூடும் என்று அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவான குழு ஒன்று கூறியுள்ளது.

“அறிமுகமில்லாத முகங்களை அதன் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதித்தால், அது போட்டியிடும் இடங்களை அமானா இழக்க நேரிடும்,” என்று ஒதாய் ரிபோர்மிஸ் செயலாளர் அப்துல் ரசாக் இஸ்மாயில் எப்எம்டிக்கு தெரிவித்தார்.

“மகாதீர் மற்றும் பிற தலைவர்களை தனது கட்சியை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் அமானா ஏன் தனது எதிர்காலத்தை சூதாட தயாராக உள்ளது என்பதில் நாங்கள் குழப்பமடைகிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பெஜுவாங் துணைத் தலைவர் மார்சுகி யஹ்யா, கட்சியைப் பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டால், அமானா சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடுவதை கட்சி பரிசீலிக்கலாம் என்று கூறினார்.