Home One Line P1 அரசின் கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு நம்பிக்கை கூட்டணி உதவும்

அரசின் கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு நம்பிக்கை கூட்டணி உதவும்

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவ நம்பிக்கை கூட்டணி ஒரு பணிக்குழுவை நிறுவியுள்ளது.

கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் அரசியல் பிளவுக்கு அப்பாற்பட்டது மற்றும் முழு நாட்டையும் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற இப்பணிக்குழு விரும்புகிறது.

இந்த பணிக்குழுவுக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் தலைமைத்தாங்குவார். மேலும் நம்பிகை கூட்டணியின் கீழ் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசாங்கங்களின் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

“மக்களுக்காகவும், நாட்டின் எதிர்காலத்துக்காகவும், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அரசியல் பிளவுகளை கடந்து பணிப்புரிய நம்பிக்கை கூட்டணி விரும்புகிறது. இந்த நடவடிக்கை மக்களை தடுப்பூசியை பெற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.