Home One Line P1 முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!

முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!

683
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகமட் சனுசி முகமட்டுக்கு பதிலாக அடுத்த கெடா மந்திரி பெசார் வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மறுத்துள்ளார்.

“கெடா மந்திரி பெசாரை மாற்றுவதில் பிரச்சனை எழவில்லை. பொதுவாக, சனுசியின் செயல்திறனில் பாஸ் திருப்தி அடைகிறது. நிர்வாக சிக்கல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்படும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான தக்கியுடின் கெடா சிக் நகரில் பிறந்தார்.

#TamilSchoolmychoice

கெடாவை பூர்வீகமாகக் கொண்டிருப்பதால் அவருக்கு பதிலாக தக்கியுடின் பொருத்தமான பாஸ் தலைவர் என்றும் அவரது குடும்பத்திற்கு அங்கு நல்ல பெயர் உண்டு என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், தக்கியுடின் தாம் இப்போதும் கிளந்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பதாகக் கூறினார்.

மலேசியா டேட்லைநில் (Malaysia Dateline) வெளியான செய்திக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.