Home One Line P1 திரெங்கானு மருத்துவமனையில் 48 சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று

திரெங்கானு மருத்துவமனையில் 48 சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று

459
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: இங்குள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் மொத்தம் 48 சுகாதார ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக திரெங்கானு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் நோர் அஸிமி யூனுஸ் தெரிவித்தார்.

நோய்த்தொற்றுக்கான காரணத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவங்களின் நெருங்கிய தொடர்புகளும் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மருத்துவமனையில் நோயாளி சிகிச்சை மேலாண்மை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, மற்றும் அவசரகால சேவைகளும் தொடர்கின்றன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.