யாங்கோன்: மியான்மாரில் இராணுவம் திங்களன்று ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு சமூக ஊடக தளங்களாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய இணைய வழங்குநர்களில் ஒருவரான டெலினோர் கூறுகையில், மேல் விவரங்கள் வரும் வரை இரண்டு தளங்களுக்கான அணுகலை மறுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய்து.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தடுத்து வைத்திருப்பது தொடர்பாக உள்நாட்டில் எதிர்ப்பு இயக்கம் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் வெள்ளிக்கிழமை யாங்கோனில் கூடி நாட்டின் உண்மையான தலைவரான ஆங் சான் சூகி மற்றும் அவரது தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
சூகி வீட்டுக் காவலில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.