Home One Line P2 மியான்மார் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதாக ஜோ பைடன் அச்சுறுத்து

மியான்மார் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதாக ஜோ பைடன் அச்சுறுத்து

949
0
SHARE
Ad

வாஷிங்டன்: மியான்மாரில் அவசரநிலை பிரகடனத்தை இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நாட்டின் முக்கியத் தலைவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

மியான்மாரில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றிப் பெற்றது.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக இராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ஆங் சான் சூ கி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

2011 வரை தொடர்ந்து இராணுவ ஆட்சி நடைபெற்றுவந்த மியான்மாரில் கடந்த 9 ஆண்டுகளாக ஜனநாயகப் பூர்வமாக ஆட்சி நடைபெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மார் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கருத்துப்படி, பைடனின் அறிக்கை தென்கிழக்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.

“மியான்மாரில் இராணுவ சதி, ஆங் சான் சூகி மற்றும் பிற அரசு ஊழியர்களை தடுத்து வைத்தல், அத்துடன் அவசரகால பிரகடனம் ஆகியவை நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நேரடி தாக்குதலாகும்” என்று பைடன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

” ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்தை நிராகரிக்க அல்லது நம்பகமான தேர்தல்களின் முடிவுகளை அழிக்க வன்முறை பயன்படுத்தப்படக்கூடாது. கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, மியான்மார் மக்கள் அமைதியான தேர்தல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது ஒரு முன்னேற்றம், இது மதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.