கோலாலம்பூர்: சங்கங்கள் சட்டத்தை மீறும் தணிக்கை செய்யப்படாத இரகசிய வங்கிக் கணக்கு அம்னோவிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சங்கப் பதிவாளர் வலியுறுத்தப்படுகிறது.
“அங்கீகரிக்கப்படாத வங்கிக் கணக்குகள் (மற்றும் தணிக்கை செய்யப்படாத அரசியல் பங்களிப்புகள்), கட்சி மற்றும் அவர்களின் தலைமையுடன் நேரடியாக தொடர்புடையவை என நிரூபிக்கப்பட்டால், சங்கப் பதிவாளரின் விதிகளை மீறியுள்ளன என அர்த்தம். நீதிப் பெறவும், வெளிப்படைத்தன்மைக்காவும் இது விசாரிக்கப்பட வேண்டும்,” பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் பைஸ் நாமான் மலேசியாகினியிடம் கூறினார்.
இரகசிய வங்கி கணக்கு தொடர்பான குற்றச்சாட்டு 1எம்டிபி தொடர்பான சொத்து பறிமுதல் வழக்கில் ஒபியு ஹோல்டிங்ஸுக்கு எதிராக அரசால் வழக்கு தொடரப்பட்டது. அரசு கைப்பற்ற விரும்பும் பணம் கட்சிக்கு சொந்தமானது என்று அம்னோ கூறியுள்ளது.
“கணக்கிடப்படாத, சரிபார்க்கப்படாத மற்றும் தணிக்கை செய்யப்படாத பணமும் சங்கச் சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகளை மீறுகிறது. இதன் விளைவாக அம்னோ சங்கப் பதிவாளரால் இரத்து செய்ய முடியும்” என்று அரசு தரப்பு கூறியது.
இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த பைஸ், இந்த வெளிப்பாடு அம்னோ அரசியலமைப்பு மற்றும் அதன் சொந்த உறுப்பினர்களுக்கு செய்யப்பட்ட துரோகச் செயலாகும் என்று கூறினார்.