Home One Line P1 இந்திய-சீன எல்லையில் வீரர்களை விலக்கிக்கொள்ள இரு நாடும் ஒப்புதல்

இந்திய-சீன எல்லையில் வீரர்களை விலக்கிக்கொள்ள இரு நாடும் ஒப்புதல்

447
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த பல மாதங்களாக இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், எல்லையில் இருந்து இராணுவ வீரர்களை விலக்கிக்கொள்ளும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்திய, சீன இராணுவ வீரர்கள் விலக்கிக்கொள்ளப்படுவதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா- சீனா இடையே கடந்த ஆண்டு ஏப்ரல்- மே காலக்கட்டத்தில் எல்லைப் பிரச்சனை உச்சத்தைத் தொட்டது. கடந்தாண்டு ஜூன் 15-ஆம் தேதியன்று இரு இராணுவத்தினரும் கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.