Home One Line P2 உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஏழு ஆண்டுகள் ஆகலாம்

உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஏழு ஆண்டுகள் ஆகலாம்

535
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகில் பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கொவிட் -19 தடுப்பூசிகளின் அடிப்படையில் மிகப்பெரிய தரவுத்தளத்தை புளூம்பெர்க் செய்தி நிறுவனம்  உருவாக்கியுள்ளது.

உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 70 விழுக்காடு முதல் 85 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அந்தோனி பாவ்சி போன்ற அமெரிக்க விஞ்ஞான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேகத்தை வைத்து கணக்கிடும் போது, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஏழு ஆண்டுகள் ஆகும் என்று புளூம்பெர்க் கூறுகிறது.