கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு குறித்து அவருக்கு தெரியாது என்று கூறினார்.
“அம்னோவுக்கு இரகசிய கணக்கு இருப்பதாக எனக்குத் தெரியாது,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சாஹிடி சைனுல் அபிடின், இரகசிய கணக்கு பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார். இருப்பினும், இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதே போன்று முகமட் நஸ்ரி அசிஸும் பதில் அளித்தார்.
“எனக்கு தெரியாது. எனக்கு எதுவும் தெரியாது (ஒரு இரகசிய கணக்கின் இருப்பு), ” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று அரசு தரப்பு வாதத்தில், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 35 பைகளில் இருந்து பல்வேறு பணங்கள் உள்ளடக்கிய 114.16 மில்லியன் ரிங்கிட் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர். அவை சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக பெறப்பட்டன என்றும் 1எம்டிபியிலிருந்து தோன்றியவை என்றும் அவர்கள் கூறினர்.