Home One Line P1 2025-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் இயங்கலைக் கற்றல் அணுகலை அரசு உறுதி செய்யும்

2025-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் இயங்கலைக் கற்றல் அணுகலை அரசு உறுதி செய்யும்

598
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் 2025- க்குள் இயங்கலைக் கற்றல் அணுகலை  உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமட் இன்று தெரிவித்தார்.

இது ‘மை டிவைஸ்’ முன்முயற்சி மூலம் செயல்படுத்தப்படுவதோடு, அனைத்து மாணவர்களும் மெய்நிகர் வகுப்புகளுக்கான மின்னியல் சாதனங்களை அணுகுவதை வழிவகுக்கும் என்று முஸ்தாபா கூறினார்.

“இயங்கலை வகுப்புகளில் கலந்துகொள்வதில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறது,” என்று அவர் இன்று மைடிஜிட்டல் மற்றும் மலேசியா டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் மெய்நிகர் வெளியீட்டில் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த முயற்சி அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் இடையேயான ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச தரவு வழங்கப்படும்,” என்று கூறினார்.

இந்த வரைபடத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மொகிதின் யாசின், இது 2030- க்குள் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்றார்.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்னியல் பொருளாதாரம் 22.6 விழுக்காடு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 500,000 புதிய வேலைகளை உருவாக்குகிறது. பொருளாதாரத் துறையின் உற்பத்தித்திறன் மட்டங்களில் 30 விழுக்காடு அதிகரிப்பு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.