Home One Line P1 ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது

ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது

698
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

“மலேசியாவில், ஜனநாயகம் என்றால் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் பேணப்பட வேண்டும். செய்தித்தளங்கள் செய்தி மற்றும் தகவல்களை பரப்புவது மட்டுமல்ல. ஆனால், அதைவிட முக்கியமாக, சமூகம் மற்றும் நாட்டின் அனைத்து விஷயங்களிலும் விமர்சனம் மற்றும் ஆய்வுகளுக்கு இது வழியை ஏற்படுத்துகிறது.

#TamilSchoolmychoice

“(ஊடகங்கள்) சமூகத்தின் மனசாட்சியைக் குரல் கொடுக்க உதவும் ஒரு முக்கியமான கருவியாகும்,” என்று அவர் முகநூலில் ஓர் இடுகை மூலம் தெரிவித்தார்.

இதற்கிடையில், மலேசியாகினி செய்தித்தளத்தில் நீதித்துறைக்கு எதிராக  வாசகர்களின் கருத்துகள் காரணமாக ஆசெய்தித்தளத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படது தொடர்பில் அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகள், உலக ஊடகங்கள், தூதர்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.