Home One Line P1 தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்

தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்

668
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னரிடம் முறையிட்டது தொடர்பாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அளித்த அறிக்கையில் தவறு இருப்பதாக தேசிய முன்னணி இன்று ஒப்புக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி நிர்வாக செயலாளர் முகமட் சாப்ரி ஆப் அஜீஸின், தேசிய முன்னணி தலைமை ஊடக அதிகாரியை ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்ததாகக் கூறினார்.

ஊடக அறிக்கை தொடர்பாக சில குழப்பங்களை விசாரிக்குமாறு அகமட் சாஹிட் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது தொடர்பாக, தலைவரின் ஊடக அறிக்கையை வெளியிடுவது குறித்து விவாதிக்க நான் இன்று காலை விசாரணைக் குழுவை அமைத்தேன். இந்த அறிக்கை உச்சமன்றக் குழு செயலாளரின் ஒப்புதலைப் பெறவில்லை. இது தேசிய முன்னணி விவாதித்த மற்றும் தீர்மானித்தபடி இல்லை, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உள் விசாரணைக் குழுவின் கருத்துக்களைக் கேட்ட பின்னர், முகமட் சாப்ரி, தேசிய முன்னணி ஊடகத் தலைவரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்ததாகவும், அது உடனடியாக நடைமுறைக்கு வந்தது என்றும் கூறினார்.

அறிக்கை நேற்று வெளியானதைத் தொடர்ந்து பல குழப்பங்கள் எழுந்துள்ளன. அவற்றில் ஒரு சில கூற்றுகள் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அளித்த அறிக்கையுடன் ஒத்துப்போனதாகக் கூறினார்.