Home One Line P1 துணைப் பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்படுவாரா?

துணைப் பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்படுவாரா?

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் படி, அம்னோ ஆளும் கூட்டணியை விட்டு விலகாமல் இருக்க, ஆகஸ்டு மாதத்திற்கு முன்னர் துணை பிரதமர் பதவி அக்கட்சிக்கு வழங்கப்படலாம்.

அப்பதவிக்கு அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாகோப் பெயரிடப்படலாம் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் நாடாளுமன்றம் அமரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்குள் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பு குறித்த அம்னோவின் இறுதி நிலைப்பாட்டை பெர்சாத்து நிச்சயமாக அறிந்து கொள்ளும் என்றும் வட்டாரம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“அதற்குள், அம்னோ இன்னும் எங்களுடன் இருக்கிறதா அல்லது பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவைத் திரும்பப் பெறுகிறதா என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் எப்எம்டிக்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக, சில உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் இஸ்மாயிலை துணை பிரதமராக நியமிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய கூட்டணியை ஆதரிக்க அம்னோ உறுப்பினர்களை அவர் கவர்ந்திழுக்க முடியும்.

எவ்வாறாயினும், அம்னோ பெர்சாத்து உடன் பணிபுரிய மறுத்தால், ஆகஸ்டு மாதம் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர், தேசிய கூட்டணி அரசாங்கம் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.