Home One Line P1 30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்க வேண்டும்

30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்க வேண்டும்

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்குமாறு மலேசிய மகளிர் அரசியல் தலைவர்கள் மன்றம் (காம்வெல்) தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிந்துள்ளதாக  மன்றத்தின் தலைவர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

காம்வெலின் முன்மொழிவு தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குத் தேவையில்லை என்றும் எளிதாக செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

“வரவிருக்கும் தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட இருக்கும் இடங்களை பரிசீலிக்க தேர்தல் ஆணையத் தலைவருக்கு நாங்கள் முன்மொழிகிறோம். இது கடினமானதும் சிக்கலானதுமல்ல. இது 222 நாடாளுமன்ற இடங்களில் 30 விழுக்காடு அல்லது பெண்களுக்கு 67 இடங்களை நியமிக்கிறது,” என்று காம்வெல் அறிமுக நிகழ்ச்சியில் சுரைடா கூறினார்.

#TamilSchoolmychoice

காம்வெலில் 13 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 31 பெண் மாநில சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

“சுதந்திரம் பெற்றதில் இருந்து 84 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 14- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நம்மிடையே 33 பெண் பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர். இது நாட்டின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 14.86 விழுக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.