இலண்டன்: பிரிட்டனில் 47 மாநிலங்களில் கண்டறியப்பட்ட கொவிட்-19 பிறழ்வு கணிசமாக அதிக இறப்புகளை ஏற்படுத்தக் கூடியது.
பி.எம்.ஜே இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பி .1.1.7 அல்லது விஓசி -202012 / 01 என அழைக்கப்படும் இந்த பிறழ்வு மிகவும் எளிதாக பரவும் என்றும், இது மிகவும் ஆபத்தானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய பிறழ்வுகளைப் போலல்லாமல் பாதிக்கப்பட்ட நபர்களில் 32 முதல் 104 விழுக்காடு வரை இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். கண்டறியப்பட்ட ஒவ்வொரு 1,000 சம்பவங்களுக்கும் இறப்பு விகிதம் இப்போது 2.5 முதல் 4.1 ஆக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஆனால் மருத்துவ சிகிச்சை முறைகள் மாறாவிட்டால் அதிக இறப்பு விகிதம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும். இந்த நோய்த்தொற்று பிறழ்வு காரணமாக இறப்பு ஆபத்து நிகழ்தகவு அதிகம், ” என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.