Home One Line P1 அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சாத்தியம்- தெங்கு ரசாலி

அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சாத்தியம்- தெங்கு ரசாலி

428
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது சாத்தியப்படலாம் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார்.

மலேசிய இன்சைட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைத்தால் அம்னோவுக்கு பொதுத் தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று மூத்த அரசியல்வாதியிடம் கேட்கப்பட்டது.

“வாய்ப்பு, எனக்குத் தெரிந்தவரை, அது கடவுளுக்குத்தான் தெரியும். நாம் வெல்ல வேண்டும் என்று கடவுள் விரும்பினால் எதுவும் சாத்தியப்படும். ஆனால், பல விஷயங்கள் பேசப்பட வேண்டும். நாம் தேர்தல்களை எதிர்கொள்கிறோம், நாம் என்ன அறிக்கையை வழங்குகிறோம், நாம் வழங்க விரும்பும் சேவைகள் மற்றும் திட்டங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அம்னோ தலைவர்களை அடுத்த தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த முடியாது என்று பலரின் கருத்து இருப்பதாக தெங்கு ரசாலி கூறினார்.

“நீதிமன்ற வழக்குகளில் ஈடுபடாதவர்கள் மக்களுக்கு சேவை செய்ய ஒரு தலைமை வழங்கப்படுவது நல்லது என்று நான் கேள்விப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அம்னோ பெர்சாத்துவுடன் அடுத்த பொதுத் தேர்தலில் இணயாது என்று அறிவித்ததை அடுத்து, அம்னோவுடன் ஒத்துழைப்பது சாத்தியம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் நிராகரிக்கவில்லை.