Home One Line P2 இலங்கையில் முஸ்லீம்கள் “புர்கா” முகத்திரை பயன்படுத்தத் தடை

இலங்கையில் முஸ்லீம்கள் “புர்கா” முகத்திரை பயன்படுத்தத் தடை

654
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கையில் சிறுபான்மை இனத்தினராகத் திகழும் முஸ்லீம்கள் புர்கா எனப்படும் முகத்திரையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அரசாங்க அமைச்சர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.

மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளும் மூடப்படும் என பொதுப் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று சனிக்கிழமை அறிவித்திருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பு  காரணத்தினால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் அதற்கான உத்தரவில் தான் கையெழுத்திட்டிருப்பதாகவும் சரத் வீரசேகரா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆரம்ப காலங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்ததில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராகத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பான்மை பௌத்த சமயத்தினரைக் கொண்டதாக இலங்கை அரசாங்கம் திகழ்கிறது.

2019-இல் கிறிஸ்துவ தேவாலயங்களும் சொகுசு தங்கும் விடுதிகளும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புர்கா பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடையை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியது.

இதற்கிடையில் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவர்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவையும் இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தத் தொடங்கியது.

முஸ்லீம்களின் மத நம்பிக்கைப்படி மரணமடைந்தவர் புதைக்கப்பட வேண்டும்.

எனினும், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துல நாடுகளில் பலத்த கண்டனங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த உத்தரவை இலங்கை அரசாங்கம் மீட்டுக் கொண்டது.