Home One Line P1 பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல

பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல

498
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது பாஸ் கட்சி தங்கள் முடிவினை வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

முவாபாக்காட் நேஷனலில் அம்னோவுடன் பக்கபலமாக இருப்பதை பாஸ் தேர்வு செய்ய வேண்டியுள்ளது, அல்லது பெர்சாத்துவுடன் அதன் ஒத்துழைப்பைத் தொடர விரும்புகிறதா என்பதை அது தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அம்னோ மற்றும் பெர்சாத்து ஆகியவை தங்கள் சர்ச்சையை இணக்கமாக தீர்க்கும் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அளித்த அறிக்கையை அடுத்து அனுவாரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

அம்னோவிற்கும் பெர்சாத்துவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய மாதங்களில் மோசமடைந்துள்ளன. பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசினுக்கு அடுத்த பொதுத் தேர்தல் வரை மட்டுமே அம்னோ ஆதரிக்கும் என்று தெரிவிக்கும் கடிதத்தில் இந்த சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்நிலையில், பாஸ் அம்னோவுடன் பக்கபலமாக இருக்கும் என்று கருதுவது தவறு என்றும் அன்வார் கூறினார்.

“வேறொரு கட்சியைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு பாதகம் என்றால் அவர்கள் அதனை செய்ய மாட்டார்கள். எனவே அம்னோ மற்றும் பாஸ் தேசிய கூட்டணியை விட்டு வெளியேறும் என்ற முடிவை நாம் கொண்டாடக்கூடாது, ” என்று அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பைத் திரும்பப் பெறுவதற்கான அம்னோவின் முடிவு இறுதியானது அல்ல என்று அவர் கூறினார்.