Home One Line P2 குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்

குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்

648
0
SHARE
Ad

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஒரு நாள் வேட்புமனு தாக்கல் செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 18) பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன் வேட்பாளராக களமிறங்குகிறார்.

பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியிலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

விருத்தாச்சலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவரும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.