Home One Line P1 கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி

கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி

664
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது.

கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள் பயன்படுத்துவது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

அண்மையில் இது தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், அல்லாஹ் என்ற வார்த்தையை மற்றவர்கள் பயன்படுத்தத் தடையில்லை எனத் தீர்ப்பு வழங்கியது.

#TamilSchoolmychoice

அந்தத் தீர்ப்பு பல சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது.

இந்நிலையில் சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனக்கு முன்னர் பதவி வகித்த இரண்டு முதலமைச்சர்கள் வகுத்து வைத்த கொள்கை அடிப்படையில் சரவாக் மாநிலத்தில் மத நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் தொடரும் எனத் தெரிவித்தார்.

சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை எப்போதும் போல பயன்படுத்தி வருவதில் தடையேதும் இல்லை எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசாங்கம் மத சகிப்புத் தன்மையைப் பேணித் தற்காத்து வருவதோடு, மக்களைத் தொடர்ந்து ஒற்றுமைப் படுத்தும் நடவடிக்கையையும் எடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.