இலண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா திங்கட்கிழமை காலை தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் ஒட்டுமொத்தமாக 79 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளன.
அமெரிக்காவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின்படியும், சிலி மற்றும் பெருவில் உள்ள பிற ஆய்வுகளின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனெகாவிற்கான மருந்தை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சோதனைகளில் அனைத்து வயது பிரிவிலிருந்து 32,449 பேர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்கா 300 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முன்கூட்டியே கேட்டுள்ளது.