Home One Line P1 சாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்

சாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்

912
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சாவை சந்தித்தனர்.

கட்சியின் தற்போதைய பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதில் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் குரல் சம்பந்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று தலைவர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் சந்திப்பு பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், அம்னோ இணையதளத்திலும் இது தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“அடிமட்ட உறுப்பினர்களின் குரல்” பொருள் என்ன என்பதை விளக்கவில்லை என்றாலும், பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பு குறித்த கட்சியின் முடிவைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

“அடிமட்டத்தின் குரல், அடிமட்டத்தினரால் எது முடிவு செய்யப்பட்டாலும், அம்னோ எந்த சமரசமும் இல்லாமல் அடிமட்ட நம்பிக்கையை உறுதியாகக் கேட்டு செயல்படுத்த வேண்டும். அம்னோ பொதுக் கூட்டம் கட்சியை வலுப்படுத்தவும், பல்வேறு மட்டங்களில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடையே ஒற்றுமையின் தொடர்ச்சியைத் தொடரவும் சிறந்த தளமாகும்,” என்று அத்தளம் தெரிவித்துள்ளது.