Home One Line P1 அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்

அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்

639
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்து ஒரு நாள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதாக மொகிதின் தெரிவித்தார்.

நாடு மற்றும் மக்கள் நலன் கருதி அம்னோ அமைச்சர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறக் கோரியதாக மொகிதின் யாசின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அம்னோ அமைச்சர்கள் என்னை மார்ச் 29 அன்று சந்தித்தனர். அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில், 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவை அடுத்து என்னிடம் கருத்து கேட்க வந்திருந்தனர்.

“நான் அவர்களை அமைச்சரவையில் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டேன். நாடு மற்றும் மக்கள் நலன் கருதி நான் இந்த முடிவை எடுக்கக் கோரினேன்,” என்று ஓர் அறிக்கையில் பிரதமர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நாடு கவனம் செலுத்தி வருவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாலும், இது அவசியம என்று அவர் கூறினார். பல அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் முக்கியமாக பதவியில் இருப்பதை மொகிதின் சுட்டிக் காட்டினார்.