Home One Line P1 பொதுத் தேர்தலுக்குள் கட்சித் தேர்தல் நடந்தால், கட்சி பிளவுப்படும்

பொதுத் தேர்தலுக்குள் கட்சித் தேர்தல் நடந்தால், கட்சி பிளவுப்படும்

546
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்பு அம்னோ தேர்தல் நடத்தப்பட்டால் கட்சியில் பிளவு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.

மேலும், தோல்வியடைந்த வேட்பாளரை மற்ற கட்சிகள் ‘திருட’ அனுமதிக்கும் என்றும் பெக்கான் அம்னோ தலைவருமான அவர் தெரிவித்தார்.

பல கட்சிகள் அம்னோவை இவ்வாறு பலவீனப்படுத்த காத்திருப்பதாக நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

“பிற கட்சிகள் அம்னோவில் தேர்தலுக்காகக் காத்திருப்பர். எனவே தோல்வியுற்றவர்கள் அவர்களின் கட்சிகளில் இணைய அழைக்கப்படுவார்கள் அல்லது வற்புறுத்தப்படுவார்கள் அல்லது தங்கள் கட்சியில் சேர முன்வருவார்கள்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னதாக, முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினின் கருத்து குறித்து கேட்டபோது நஜிப் இவ்வாரு கூறினார். அம்னோ தலைமை தனது உள்கட்சி நெருக்கடியைத் தீர்க்க கட்சியின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கைரி கேட்டுக் கொண்டார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல், இந்த ஆண்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கைரி கூறினார்.