இந்த பதிவு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சாஹிட் இனி கட்சியை வழிநடத்த தகுதியற்றவர் என்று அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
சாஹிட் அப்படி நடந்து கொள்ளக்கூடாது, அம்னோ உறுப்பினர்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று சினார் ஹாரியான் செய்தித்தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
“இது நல்லதல்ல, ஒரு தலைவர் அப்படி நடந்து கொள்ளக்கூடாது. அவர் பொறுப்பாக இருக்க வேண்டும், ஏனென்றால் மக்கள் அவர் சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்புகிறார்கள். இந்த குரல் பதிவு உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவரது குரல் போலவே உள்ளது. அது உண்மையாக இருந்தால், அவருக்கு அத்தகைய நோக்கங்கள் இருந்தால், அவர் தலைவர் பதவிக்கு தகுதியற்றவர், ” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நேற்று அகமட் சாஹிட் ஹமிடி இந்த குரல் பதிவு குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இது குறித்து கருத்துரைத்த அன்வார் இப்ராகிம், நாடாளுமன்ற உறுப்பினர்கலை மிரட்டி, தங்கள் வசம் இழுக்க இயலாத அரசால் மேற்கொள்ளப்படும் தீய நடவடிக்கைகள் இது என்று குறிப்பிட்டுள்ளார்.